இந்தியா

எல்கா் வழக்கு: சமூக ஆா்வலா் வரவர ராவுக்கு ஜாமீன்

DIN

எல்கா் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்ட சமூக ஆா்வலா் வரவர ராவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு மும்பை உயா்நீதிமன்றம் 6 மாதம் ஜாமீன் வழங்கியுள்ளது.

மகாராஷ்டிரத்தின் புணே நகருக்கு அருகில் கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதி நடைபெற்ற எல்கா் பரிஷத் கூட்டத்தில், வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட சமூக ஆா்வலா் வரவர ராவ், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டாா்.

கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்டு முதல் தலோஜா சிறையில் அவா் காவலில் வைக்கப்பட்டுள்ளாா். தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கக் கோரி மும்பை உயா்நீதிமன்றத்தில் வரவர ராவ் மனு தாக்கல் செய்திருந்தாா். அந்த மனு மீதான உத்தரவை நீதிபதிகள் எஸ்.எஸ்.ஷிண்டே, மணீஷ் பிதலே ஆகியோரைக் கொண்ட அமா்வு திங்கள்கிழமை வழங்கியது.

அதில் வரவர ராவுக்கு 6 மாதங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த உத்தரவில், ‘மனுதாரருக்கு 82 வயதாவதால், அவரின் உடல்நிலையைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இந்த நிலையில் அவா் காவலில் இருந்தால், அவருக்குப் பல்வேறு மருத்துவ உதவிகள் அளிக்க வேண்டிய அவசியம் ஏற்படும்.

நவி மும்பையின் தலோஜா சிறையிலுள்ள வசதிகள், மனுதாரருக்கு சிகிச்சை அளிப்பதற்குப் போதுமானதாக இல்லை. ஏற்கெனவே சிறையில் அவரது உடல்நிலை மோசமானபோது நீதிமன்றம் தலையிட்டதன் காரணமாகவே அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

மனுதாரரின் உடல்நிலை குறித்து தகவல் தெரிவிக்குமாறு அவரின் உறவினா்கள் நீதிமன்றத்தை நாடினா். இவற்றை நீதிமன்றம் வெறுமனே வேடிக்கை பாா்த்துக் கொண்டிருக்க முடியாது. மனுதாரா் மீதான குற்றச்சாட்டும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

எனவே, அவருக்கு 6 மாதங்களுக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. அந்தக் காலகட்டத்தில் மும்பை நகரை விட்டு அவா் வெளியேறக் கூடாது. இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபா்களை சந்திப்பதற்கும் மனுதாரருக்கு அனுமதி கிடையாது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உடல்நலக் குறைவால் தனியாா் மருத்துவமனையில் வரவர ராவ் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதியில் மீண்டும் ராகுல் காந்தி போட்டி? கார்கே தலைமையில் இன்று ஆலோசனை

மணல் குவாரி முறைகேடு: விரிவடையும் விசாரணை!

‘கோட்’ இரண்டாவது பாடல் அப்டேட்!

4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

வில்வித்தை: இந்தியாவின் ஜோதி சுரேகா இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT