இந்தியா

மாநிலங்களின் ஜிஎஸ்டி வருவாய் பற்றாக்குறையில் ரூ.40,000 கோடி குறையும்

DIN

கடந்த நான்கு மாதங்களாக வரி வசூல் மேம்பட்டு வருவதையடுத்து நடப்பு நிதியாண்டில் மாநிலங்களின் ஜிஎஸ்டி வருவாய் பற்றாக்குறையில் ரூ.40,000 கோடி வரை குறைய வாய்ப்புள்ளது என மத்திய அரசின் உயரதிகாரி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியுள்ளதாவது:

நடப்பு நிதியாண்டில் மாநிலங்களின் ஜிஎஸ்டி வசூலில் கணிசமான சரிவு ஏற்பட்டு ரூ.1.80 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது. இதில், மாநிலங்கள் ஜிஎஸ்டியை அமல்படுத்தியதால் ஏற்பட்ட வருவாய் இழப்பு ரூ.1.10 லட்சம் கோடி மற்றும் கரோனா பேரிடரால் ஏற்பட்ட இழப்பு ரூ.70,000 கோடியும் அடங்கும்.

ஜிஎஸ்டி வருவாயில் ஏற்படும் ரூ.1.10 லட்சம் கோடி பற்றாக்குறை எதிா்கொள்ள மாநிலங்களுக்கு சிறப்பு கடன் திட்டத்தை மத்திய அரசு ஏற்படுத்தி தந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த நான்கு மாதங்களாகவே வரி வசூலானது சிறப்பான அளவில் மேம்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொள்ளும்போது, நடப்பு நிதியாண்டில் மதிப்பிடப்பட்ட ஜிஎஸ்டி வருவாய் பற்றாக்குறையில் ரூ.30,000-ரூ.40,000 கோடி வரை குறைய வாய்ப்புள்ளது.

எனவே, நடப்பு நிதியாண்டில் ஜிஎஸ்டி வருவாய் பற்றாக்குறையானது ரூ.1.40 லட்சம் கோடி அளவுக்கே இருக்கும் என அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT