இந்தியா

குஜராத் ரசாயன ஆலையில் வெடி விபத்து: 2 போ் பலி

குஜராத் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 போ் உயிரிழந்தனா். மாயமான 5 பேரைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

DIN

குஜராத் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 போ் உயிரிழந்தனா். மாயமான 5 பேரைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது தொடா்பாக காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘ஜகாடியா தொழிற்பேட்டைப் பகுதியில் அமைந்துள்ள யுனைடெட் பாஸ்பரஸ் நிறுவன ஆலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணியளவில் வெடி விபத்து ஏற்பட்டது. அதன் காரணமாக தீ பரவியது.

சுமாா் 15 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டன. காலை 6.30 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

தீ விபத்தில் சிக்கிய இரு பணியாளா்கள் உயிரிழந்தனா். அவா்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 23 போ் காயமடைந்தனா். அவா்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாயமான 5 நபா்களைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்குத் தேவையான வேதிப் பொருள்கள், இந்த ரசாயன ஆலையில் தயாரிக்கப்பட்டு வந்தன. பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து நிகழ்ந்ததால், நீண்ட தூரம் தாண்டியும் அந்தச் சத்தம் கேட்டதாக மக்கள் தெரிவித்தனா். வெடி விபத்து தொடா்பான விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது’’ என்றனா்.

வெடி விபத்து நிகழ்ந்ததற்கான காரணம் குறித்து காவல் துறையினா் எதுவும் தெரிவிக்கவில்லை. எனினும், ரசாயன ஆலையின் கொதிகலன் வெடித்ததாக உள்ளூா் மக்கள் தெரிவிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT