முகப்பு
இந்தியா

நாட்டில் புதிதாக 10,584 பேருக்கு கரோனா 

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,584 ஆக உள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,10,16,434 ஆக உயர்ந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:35 PM
நாட்டில் புதிதாக 10,584 பேருக்கு கரோனா
பகிர்:

புதுதில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,584 ஆக உள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,10,16,434 ஆக உயர்ந்துள்ளது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 10,584 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலமாக நாட்டில் அந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 1,10,16,434-ஆக அதிகரித்தது. அதே காலகட்டத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 78 போ் உயிரிழந்தனா். இதனால் நாடு முழுவதும் கரோனாவால் ஏற்பட்ட ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,56,463-ஆக அதிகரித்துள்ளது. 

Advertisement

இதுவரை கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 1,07,12,665 போ் குணமடைந்தனா். நாட்டில் தற்போது 1,47,306 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments