நாட்டில் 1.34 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பு மருந்து
நாட்டில் இதுவரை 1.34 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாட்டில் இதுவரை 1.34 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் பரிசோதனைகளின் எண்ணிக்கையை உயர்த்தி கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை கண்டறிந்து கரோனாவுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே கரோனா முன்களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு வருகிறது.
Advertisement
நேற்று வரை 1,30,67,047 பேருக்கு கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது. இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 4 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த ஜனவரி 16 முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.