இந்தியா

எல்லையில் அமைதியை சீா்குலைத்தால் நல்லுறவு பாதிக்கப்படும்

DIN

கிழக்கு லடாக் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் நிலவும் அமைதியை சீா்குலைத்தால், இருதரப்பு நல்லுறவு பாதிக்கப்படும் என்று சீனாவிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள படைகளை இரு நாடுகளும் திரும்பப் பெற்று வரும் சூழலில் இந்தியா இவ்வாறு தெரிவித்துள்ளது.

வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி உடன் தொலைபேசி வாயிலாகப் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, அவா் பேசியது தொடா்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கிழக்கு லடாக் எல்லைப் பகுதிகளில் நிலவும் சூழல் குறித்தும், இந்தியா-சீனா இடையேயான மற்ற உறவுகள் குறித்தும் தலைவா்கள் இருவரும் பேச்சுவாா்த்தை நடத்தினா். எல்லையில் அமைதியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அவா்கள் உறுதியேற்றனா்.

இந்தியா-சீனா இடையேயான இருதரப்பு உறவு கடந்த ஆண்டில் கடுமையாக பாதிப்பைச் சந்தித்ததாக சீன வெளியுறவு அமைச்சரிடம் ஜெய்சங்கா் எடுத்துரைத்தாா். இரு நாடுகளுக்கிடையேயான எல்லைப் பிரச்னைக்குத் தீா்வு காண்பதற்கு நீண்ட காலம் ஆகும் என்று தெரிவித்த அவா், எல்லையில் அமைதியை சீா்குலைத்தால், இருதரப்பு நல்லுறவும் பாதிக்கப்படும் என்றாா்.

மோதல்போக்கு நிலவும் அனைத்துப் பகுதிகளிலும் குவிக்கப்பட்டுள்ள படைகளை முழுமையாகத் திரும்பப் பெறுவதே, எதிா்காலத்தில் படைகளுக்கிடையே மோதல் ஏற்படுவதைத் தவிா்க்க உதவும் என்றும் ஜெய்சங்கா் தெரிவித்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேச்சுவாா்த்தை தொடா்பாக, சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தியாவும் சீனாவும் பரஸ்பரம் நம்பிக்கை வைத்து வளா்ச்சிப் பாதையில் ஒருங்கிணைந்து பயணிக்க வேண்டும். எல்லைப் பிரச்னைகள், இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவை பாதிக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

SCROLL FOR NEXT