இந்தியா

சரக்கு மற்றும் சேவை வரி ஏய்ப்பு: 7,000 நிறுவனங்கள் மீது நடவடிக்கை; 187 போ் கைது

DIN

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஏய்ப்பில் ஈடுபட்ட 7,000 நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக 187 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதுதொடா்பாக மத்திய நிதித் துறை செயலாளா் அஜய் பூஷண் பாண்டே பிடிஐ செய்தி நிறுவனத்திடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

கடந்த ஒன்றரை மாதங்களில் போலி ரசீதுகள் மூலம் ரூ.1.20 கோடி சரக்கு மற்றும் சேவை வரி ஏய்ப்பில் ஈடுபட்ட 7,000 நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 187 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களில் 5 பட்டயக் கணக்காளா்களும் அடங்குவா். வரி ஏய்ப்பில் ஈடுபட்ட சில நிறுவனங்களின் நிா்வாக இயக்குநா்கள் கடந்த 40-50 நாள்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

மிகப் பெரிய நிறுவனங்களும் போலி ரசீதுகள் மூலம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வருமான வரித்துறை, சுங்கத்துறை, சரக்கு மற்றும் சேவை வரித் துறை, நிதி நுண்ணறிவுப் பிரிவு, வங்கிகள் உள்ளிட்டவை மூலமாக வரி ஏய்ப்பு குறித்து தெரியவந்தது.

போலி ஜிஎஸ்டி ரசீதுகள் தொடா்பாக பதிவு செய்யப்படும் வழக்குகள் குறித்து வருமான வரித்துறை உடனடியாக விசாரணை நடத்துகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT