முகப்பு
இந்தியா

கேரளத்தில் இன்று மேலும் 4,545 பேருக்கு கரோனா

கேரளத்தில் இன்று மேலும் 4,545 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
கோப்புப் படம்.
பகிர்:

கேரளத்தில் இன்று மேலும் 4,545 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4,545 பேருக்கு கரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 8,11,148 ஆக உயர்ந்துள்ளது. 
கரோனாவுக்கு இன்று மேலும் 23 பேர் பலியானார்கள். இதன்மூலம் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 3,302ஆக உயர்ந்துள்ளது. 
கரோனாவிலிருந்து இன்று 4,659 பேர் குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 7,43,467 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 64,179 பேர் சிகிச்சையில் உள்ளனர். 2,03,935 கண்காணிப்பில் உள்ள நிலையில் 441 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளனர். 
கடந்த 24 மணிநேரத்தில் 45,695 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →