இந்தியா

இந்திய கடற்படையின் மிகப் பெரிய பாதுகாப்பு பயிற்சி: இன்று தொடக்கம்

DIN

புது தில்லி: இந்திய கடற்படையின் மிகப் பெரிய கடல் கண்காணிப்பு பாதுகாப்பு பயிற்சி செவ்வாய்க்கிழமை தொடங்கவுள்ளது.

இதுகுறித்து இந்திய கடற்படை அதிகாரிகள் கூறியது:

கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் முறையாக ‘கடல் கண்காணிப்பு’ என்ற பெயரில் இந்திய கடற்படை மிகப் பெரிய பாதுகாப்புப் பயிற்சியில் ஈடுபட்டது. இந்த பயிற்சியை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. இந்த பயிற்சி 2-ஆவது முறையாக இவ்வாண்டு ஜனவரி 12, 13-ஆம் தேதிகளில் மேற்கொள்ளப்படவுள்ளது.

பதின்மூன்று கடலோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய 7,516 கி.மீ. நீள கடற்கரைப் பகுதிகள் மற்றும் பிரத்யேக பொருளாதார மண்டலங்களில் இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்படவுள்ளது. இதில் கடலோர பாதுகாப்புப் படையினா், சுங்கத்துறையினா் உள்ளிட்டோரும் பங்கேற்கவுள்ளனா் என்று தெரிவித்தனா்.

கடந்த 2011-ஆம் ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பயங்கரவாதிகள் கடல் வழியாக வந்து தாக்குதல் நடத்தினா். அந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின்னா், கடலோர பாதுகாப்பு கட்டமைப்பு ஒட்டுமொத்தமாக மறுசீரமைக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து கடல் கண்காணிப்பு பாதுகாப்புப் பயிற்சி மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT