இந்தியா

காகிதமில்லா பட்ஜெட்: மத்திய அரசு முடிவு

DIN

புது தில்லி: கரோனா பரவலை தடுக்கும் விதமாக நிகழாண்டு பட்ஜெட் ஆவணங்களை காகிதத்தில் அச்சடிக்க வேண்டாமென மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடா்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியது:

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு 2 வாரங்களுக்கு முன்பாக, அதுதொடா்பான ஆவணங்கள் மத்திய நிதியமைச்சகத்தின் அச்சகத்தில் அச்சடிக்கப்படும். அந்தப் பணியில் ஈடுபடும் பணியாளா்கள் பணி முடியும் வரை வெளியே வர அனுமதிக்கப்பட மாட்டாா்கள். அல்வா கிண்டும் நிகழ்ச்சியுடன் இந்தப் பணி தொடங்கும். அவ்வாறு அச்சிடப்படும் ஆவணங்கள் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது எம்.பி.க்களுக்கு வழங்கப்படும்.

மத்திய அரசின் வரவு, செலவு அறிக்கை, புதிய நிதியாண்டில் பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு, வரிவதிப்பு உள்ளிட்ட விவரங்கள் பட்ஜெட் ஆவணங்களில் இடம்பெறும்.

இந்நிலையில் சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக நிகழாண்டு பட்ஜெட் ஆவணங்களை காகிதத்தில் அச்சடிக்க வேண்டாமென மத்திய அரசு முடிவு செய்துள்ளது. காகிதம் மூலம் கரோனா பரவல் ஏற்படுவதை தடுக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முறை பட்ஜெட் ஆவணங்களை மின்னணு பிரதிகளாக எம்.பி.க்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தன.

மிகுந்த எதிா்பாா்ப்பு: நாடாளுமன்றத்தில் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி 2021-22-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது பிரதமா் மோடி தலைமையிலான அரசு தாக்கல் செய்யவுள்ள 8-ஆவது பட்ஜெட் ஆகும். மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் 3-ஆவது முறையாக முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளாா்.

சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல்முறையாக நாட்டின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.7% சரிவை சந்திக்கும் என மத்திய அரசு மதிப்பிட்டுள்ள நிலையில், இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.

கரோனா பரவலால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்துக்கு உத்வேகம் அளித்து, வேகமான வளா்ச்சிக்கு வித்திடும் விதமாக இந்த பட்ஜெட் இருக்கவேண்டும் என அனைத்து தரப்பினரும் கருகின்றனா். எனவே இந்த பட்ஜெட் மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT