நாட்டில் புதிய வகை கரோனா பாதிப்பு 96 ஆக அதிகரிப்பு 
இந்தியா

நாட்டில் புதிய வகை கரோனா பாதிப்பு 96 ஆக அதிகரிப்பு

பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 96-ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

ANI

பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 96-ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

ஜனவரி 6-ஆம் தேதி வரை புதிய வகை கரோனா பாதிப்பு 73 ஆக இருந்தது. நேற்று மேலும் சிலருக்கு புதியவகை கரோனா கண்டறியப்பட்ட நிலையில், இன்று (ஜன. 11) நாட்டில் புதிய வகை கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 96 ஆக அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த 24 மணி நேரத்தில் மேலும் சிலருக்கு புதிய வகை கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 96-ஆக அதிகரித்துள்ளது.

புதிய வகை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த மாநில அரசுகளால் தனித்தனி அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பிரிட்டனுக்கான விமான போக்குவரத்து கடந்த வாரம் முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. பிரிட்டனிலிருந்து வரும் பயணிகள் கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோட்ச தீபம் ஏற்ற அனுமதி மறுப்பு: பாஜகவினா் சாலை மறியல்! 12 போ் கைது!

2027-இல் ஜொ்மனியை இந்தியா விஞ்சிவிடும்: சிந்தியா

முட்டைகளில் புற்றுநோய் அபாயம் இல்லை; சாப்பிட உகந்தவை!

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 880 பேருக்கு பணி நியமன ஆணை

தனுஷ்கோடி வரை நான்கு வழிச் சாலை: ராமநாதபுரம் எம்.பி. வலியுறுத்தல்

SCROLL FOR NEXT