இந்தியா

தெலங்கானாவில் முதல் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண் துப்புரவு பணியாளர்

ENS


நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று காலை தொடங்கியது. தெலங்கானாவில் துப்புரவுப் பணியாளரான 42 வயது கிஸ்தம்மா, முதல் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.

செகுந்தராபாத்தில் உள்ள காந்தி மருத்துவமனையில் இன்று காலை கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.

முதல் தடுப்பூசியை செலுத்திக் கொண்ட கிஸ்தம்மா கூறுகையில், தற்போது நான் நன்றாக இருப்பதாகவே உணர்கிறேன். தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு சிறிது நேரம் அமர்ந்திருக்கச் சொன்னார்கள். அவ்வளவுதான். அனைவருமே எந்த அச்சமும் இல்லாமல் கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

தடுப்பூசி போட்டுக் கொண்டது குறித்த கேட்டதற்கு, யாரும் என்னை தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கூறவில்லை. எனக்கு எந்த பயமும் இல்லை, இந்த மருத்துவமனையின் சங்கத் தலைவர் நான். அனைத்து துப்புரவுப் பணியாளர்களும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

சுமார் 14 ஆண்டுகளாக காந்தி மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளராக இருக்கும் கிஸ்தம்மா, அந்த மருத்துவமனை முழுவதும் கரோனா சிறப்பு மையமாக மாறிய முழுக் காலமும் கிஸ்தம்மா அங்கு துப்புரவுப் பணியை மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

கேரளம், தமிழகத்துக்கான ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை தளா்வு

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

SCROLL FOR NEXT