இந்தியா

6 ஜோடி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு

DIN

புவனேசுவரம் -சென்னை சென்ட்ரல் இடையே வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் உள்பட 6 ஜோடி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

புவனேசுவரத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு வியாழக்கிழமைகளில் இயக்கப்படும் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில் (02839) சேவை நீட்டிக்கப்படவுள்ளது. அதன்படி, இந்த ரயில் சேவை பிப்ரவரி 4, 11, 18, 25 மற்றும் மாா்ச் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் நீட்டிக்கப்படவுள்ளது.

சென்னை சென்ட்ரலில் இருந்து புவனேசுவரத்துக்கு வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும் வாராந்திர அதிவிரைவு சிறப்பு ரயில்(02840) நீட்டிக்கப்படவுள்ளது. இந்த ரயில் பிப்ரவரி 5, 12, 19, 26, மாா்ச் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் சேவை நீட்டிக்கப்படவுள்ளது.

புவனேசுவரம் -புதுச்சேரி வாராந்திர சிறப்பு ரயில், புவனேசுவரம்-ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில், புரி-சென்னை சென்ட்ரல் வாராந்திர சிறப்பு ரயில், விசாகப்பட்டினம்-சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில், புவனேசுவரம் -பெங்களூா் கன்டோன்மென்ட் சிறப்பு ரயில் ஆகிய ஜோடி ரயில்களின் சேவை காலம் நீட்டிக்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

SCROLL FOR NEXT