இந்தியா

மேலும் 45 லட்சம் கோவேக்ஸின் தடுப்பூசி: பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு அனுமதி

DIN

பாரத் பயோடெக் நிறுவனம் மேலும் 45 லட்சம் கோவேக்ஸின் தடுப்பூசிகளைத் தயாரித்து வழங்குவதற்கான அனுமதியை மத்திய அரசிடமிருந்து பெற்றுள்ளதாக அந்நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.
 இதுகுறித்த விவரம்:
 முதல்கட்டமாக 55 லட்சம் கோவேக்ஸின் தடுப்பூசிகளை பாரத் பயோடெக் நிறுவனத்திடமிருந்து வாங்குவதற்கான உத்தரவை மத்திய அரசு வெளியிட்டது.
 இதையடுத்து, தற்போது மேலும் 45 லட்சம் தடுப்பூசிகளை அளிப்பதற்கான உத்தரவை மத்திய அரசிடமிருந்து நிறுவனம் பெற்றுள்ளது. இவற்றில் 8 லட்சம் தடுப்பூசிகள் மோரீஷஸ், பிலிப்பின்ஸ், மியான்மர் போன்ற நட்பு நாடுகளுக்கு நல்லெண்ண அடிப்படையில் இலவசமாக வழங்கப்படும்.
 முதல் கட்டமாக அளித்த 55 லட்சம் தடுப்பூசிகள் விஜயவாடா, குவாஹாட்டி, பாட்னா, தில்லி, குருúக்ஷத்ரம், பெங்களூரு, புணே, புவனேசுவரம், ஜெய்ப்பூர், சென்னை, லக்னௌ ஆகிய நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
 கூடுதலாக வழங்கவிருக்கும் 45 லட்சம் தடுப்பூசிகளில் 16.5 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசுக்கு நன்கொடையாக நிறுவனம் அளிக்கும் என்று அந்நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலை, அறிவியல் படிப்புகளுக்குத் திரும்பும் மாணவா்களின் கவனம்!

இந்திய விமானப்படையில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மத்திய அரசு நிறுவனங்களில் வேலை: யுபிஎஸ்சி அறிவிப்பு

அம்பலமூலா கிராமத்தில் உலவிய கரடிகள்

‘அரசியல் கூட்டணிக்காக காவிரியை திமுக பலி கொடுக்கக் கூடாது’

SCROLL FOR NEXT