முகப்பு
இந்தியா

பனிமூட்டத்தால் மேற்கு வங்கத்தில் விபத்து: பிரதமர் இழப்பீடு அறிவிப்பு

மேற்கு வங்கத்தில் பனிமூட்டம் காரணமாக நேரிட்ட பயங்கர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு  தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:20 PM
பிரதமர் நரேந்திர மோடி (கோப்புப்படம்)
பகிர்:


மேற்கு வங்கத்தில் பனிமூட்டம் காரணமாக நேரிட்ட பயங்கர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு  தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டம் துப்குரி நகரில் அடர் பனிமூட்டம் காரணமாக நேரிட்ட சாலை விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி பகுதியில் நேரிட்ட விபத்து வேதனையளிக்கிறது.

விபத்தில் படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று அவர்களது குடும்பத்தாருடன் சேர்ந்து வேண்டிக்கொள்கிறேன்.

பிரதமர் நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். மேலும் படுகாயமடைந்தவர்களுக்காக ரு.50 ஆயிரம் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →