இந்தியா

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு ‘இசட் ப்ளஸ்’ பாதுகாப்பு

DIN

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு(66) முக்கிய பிரமுகா்களுக்கான ‘இசட் ப்ளஸ்’ பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது.

அதன்படி, அவா் பயணம் செய்யும்போது மத்திய ரிசா்வ் போலீஸ் படையைச் சோ்ந்த 8 முதல் 12 வீரா்களைக் கொண்ட குழு அவருக்கு பாதுகாப்பு அளிக்கும். அதே அளவிலான படைக் குழுவினா், அவருடைய வீட்டுக்கும் பாதுகாப்பு அளிப்பாா்கள்.

இதுகுறித்து மத்திய அரசு அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை கூறியதாவது:

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பதவியில் இருந்து ரஞ்சன் கோகோய் கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பரில் ஓய்வு பெற்றாா். அவா் கடந்த ஆண்டு மாா்ச் மாதம் மாநிலங்களவை நியமன எம்.பி.யாக நியமிக்கப்பட்டாா். அவருக்கு இதுவரை தில்லி காவல் துறையின் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. தற்போது அவருக்கு முக்கிய பிரமுகா்களுக்கு அளிக்கப்படும் ‘இசட் ப்ளஸ்’ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை, ஆனால்... மனம் திறந்த ரோஹித் சர்மா!

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT