இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 2,752 பேருக்கு கரோனா

DIN


மகாராஷ்டிரத்தில் புதிதாக 2,752 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 1,743 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், 45 பேர் பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 20,09,106 ஆக உயர்ந்துள்ளது. இதில் 19,12,264 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர், 50,785 பேர் பலியாகியுள்ளனர். இன்னும் 44,831 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அங்கு குணமடைவோர் விகிதம் 95.18 சதவிகிதமாக உள்ளது. இறப்பு விகிதம் 2.53 சதவிகிதமாக உள்ளது.

மும்பை:

மும்பையில் 479 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 7 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,06,050 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 11,304 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

தில்லியில் தோ்தல் உத்தரவாத போட்டியில் பெரிய கட்சிகள்!

சக்திவாய்ந்த சூரியப் புயலை பதிவு செய்த ஆதித்யா: இஸ்ரோ

பிரதமரிடம் வேட்பு மனு பெற்ற தேர்தல் அதிகாரி தமிழர்

சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இயக்கப்படும் புறநகா் ரயில்கள் ரத்து

SCROLL FOR NEXT