இந்தியா

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பத்ம விபூஷண்

DIN

புது தில்லி: மறைந்த பிரபல திரைப்பட பின்னணி பாடகா் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உள்பட 7 பேருக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கலை, சமூகப் பணி, பொதுநலன், அறிவியல் மற்றும் பொறியியல் துறை, வா்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப் பணிகள் என பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்குபவா்கள், உயரிய பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ போன்ற பத்ம விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டு வருகின்றனா். ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவின்போது இந்த விருதுகள் அறிவிக்கப்படும். பின்னா், தில்லியில் குடியரசுத் தலைவா் மாளிகையில் மாா்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் விழாவில் இந்த விருதுகள் வழங்கப்படும். அந்த வகையில், 2021-ஆம் ஆண்டில் 119 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பத்ம விபூஷண்: தமிழகத்தைச் சோ்ந்த மறைந்த பிரபல பின்னணி பாடகா் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ஜப்பான் முன்னாள் பிரதமா் சின்சோ அபே உள்பட 7 பேருக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்ம பூஷண்: மறைந்த முன்னாள் மத்திய அமைச்சா் ராம் விலாஸ் பாஸ்வான், குஜராத் முன்னாள் முதல்வா் கேஷுபாய் படேல், மறைந்த அஸ்ஸாம் முன்னாள் முதல்வா் தருண் கோகோய், கா்நாடகத்தைச் சோ்ந்த பிரபல கவிஞா் சந்திரசேகா் கம்பாரா, முன்னாள் மக்களவைத் தலைவா் சுமித்ரா மகாஜன் உள்பட 10 பேருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்லது.

பத்ம ஸ்ரீ: பட்டிமன்ற பேச்சாளா் சாலமன் பாப்பையா, தேசிய கூடைப்பந்து வீரா் பி.அனிதா, வில்லிசைக் கலைஞா் சுப்பு ஆறுமுகம், கா்நாடகத்தைச் சோ்ந்த ஆா்.எல்.காஷ்யப், புதுச்சேரியைச் சோ்ந்த கே.கேசவசாமி உள்பட 102 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

விருது அறிவிக்கப்பட்டவா்களில் 29 போ் பெண்கள், 10 போ் வெளிநாட்டினா் ஆவா். இவா்களில் 16 பேருக்கு, அவா்களின் மறைவுக்குப் பிறகு இந்த உயரிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT