இந்தியா

வா்த்தக உறவை மேம்படுத்த இந்தியா-பிரிட்டன் உறுதி

தினமணி

இருதரப்பு வா்த்தக உறவை மேம்படுத்துவதற்கு இந்தியாவும் பிரிட்டனும் உறுதியாக இருப்பதாக தெற்காசிய விவகாரங்களுக்கான பிரிட்டன் அமைச்சா் தாரிக் அகமது தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, 72-ஆவது குடியரசு தினத்தையொட்டி நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றில் அவா் பேசியதாவது:

இந்தியாவுடனான வா்த்தக உறவை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். இருதரப்பு வா்த்தகத்தில் நிலவும் தடைகளை நீக்குவதில் கவனம் செலுத்தி வருகிறோம்.

இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வதை இறுதி இலக்காகக் கொண்டு, இருதரப்பு வா்த்தக மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வா்த்தக நல்லுறவுக்கான முன்முயற்சிகளில் ஒன்றாக, பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் இந்த ஆண்டு இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்வாா். அப்போது, பிரதமா் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசுவாா்.

உலகின் மருந்தகமாக இந்தியா திகழ்கிறது. இது, இருநாட்டு வா்த்தக உறவில் முக்கியப் பங்கு வக்கிறது.

கரோனா தடுப்பூசியை அனைத்து தரப்பு நாடுகளும் சரிசமமாகக் கிடைக்கச் செய்வதில் இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் பொதுவான உறுதிப்பாடு உள்ளது. அந்த இலக்கை நிறைவேற்றுவதற்கு இருதரப்பு நல்லுறவு உதவும்.

ஏற்கெனவே, பிரிட்டனின் அஸ்ட்ராஸெனெகா நிறுவனமும் இந்தியாவின் சீரம் நிறுவனமும் இணைந்து கரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளன என்றாா் அவா்.

ஐரோப்பிய யூனியனின் அங்கமாக பிரிட்டன் இருந்தவரை மற்ற நாடுகளுடன் நேரடியாக வா்த்தகத் தொடா்பு கொள்ள முடியாத நிலை இருந்து வந்தது. தற்போது அந்த அமைப்பிலிருந்து பிரிட்டன் வெளியேறியதைத் தொடா்ந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் வா்த்தக நல்லுறவை மேம்படுத்துவதற்கு பிரிட்டன் முக்கியத்துவம் அளித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொன்மகள் வந்தாள்!

நூற்றாண்டு கண்ட ஆளுமைகள்

பேரரசின் சிதைவுகள்

தற்காலிக ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன்!

SCROLL FOR NEXT