முகப்பு
இந்தியா

ராஜஸ்தானில் சாலை விபத்து: 8 பேர் பலி, 4 பேர் காயம்

ராஜஸ்தானின் டோங்க் மாவட்டத்தில் ஜீப்பை பின்னால் இருந்து லாரி மோதியதில் 8 பேர் உயிரிழந்தனர் மற்றும் 4 பேர் காயமடைந்தனர் என்று காவல்துறையினர் புதன்கிழமை தெரிவித்தனர். 

Updated On : 27 ஜனவரி, 2021 at 11:09 AM
ராஜஸ்தானில் சாலை விபத்து: 8 பேர் பலி, 4 பேர் காயம்
பகிர்:

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் டோங்க் மாவட்டத்தில் ஜீப்பை பின்னால் இருந்து லாரி மோதியதில் 8 பேர் உயிரிழந்தனர் மற்றும் 4 பேர் காயமடைந்தனர் என்று காவல்துறையினர் புதன்கிழமை தெரிவித்தனர். 

இந்த விபத்து தேசிய நெடுஞ்சாலை-12இல் அதிகாலை 2.15 மணிக்கு பயணிகள் நிறைந்த ஜீப்பை பின்னால் இருந்து லாரி மோதியுள்ளது. 

இந்த மோதலில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் 4 பேர் காயமடைந்ததாக  டோங்க் சதர் காவல் நிலைய எஸ்.எச்.ஓ தஷ்ரத் சிங் தெரிவித்தார். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். 

Advertisement

விபத்தில் பலியானவர்கள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ராஜ்கரை சேர்ந்தவர்களாவர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.