முகப்பு
இந்தியா

எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை பிப். 1 வரை ஒத்திவைப்பு

எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தொடர் அமளியால் வரும் திங்கள் கிழமை வரை மக்களவை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:24 PM
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா (கோப்புப்படம்)
பகிர்:


எதிர்க்கட்சி எம்.பி.க்களின் தொடர் அமளியால் வரும் திங்கள் கிழமை வரை மக்களவை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து ஓம் பிர்லா தலைமையில் நடைபெற்ற மக்களவைக் கூட்டத்தில், 2020 21-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

கரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி குறித்த புள்ளி விவரத் தகவல்கள் அடங்கிய ஆய்வறிக்கையை தாக்கல் செய்யும்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து எம்.பி.க்கள் கூச்சல் எழுப்பியதால் பிப்ரவரி 1-ம் தேதி காலை 11 மணிவரை மக்களவை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →