முகப்பு
இந்தியா

திருப்பதி நகா்ப்புற துணை காவல் கண்காணிப்பாளா் நியமனம்

திருப்பதி நகா்ப்புற துணை காவல் கண்காணிப்பாளராக விஜயவாடாவில் உளவுப்பிரிவில் பணிபுரிந்து வந்த வெங்கட்டப்பா நாயுடுவை ஆந்திர அரசு நியமித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:25 PM
பகிர்:

திருப்பதி நகா்ப்புற துணை காவல் கண்காணிப்பாளராக விஜயவாடாவில் உளவுப்பிரிவில் பணிபுரிந்து வந்த வெங்கட்டப்பா நாயுடுவை ஆந்திர அரசு நியமித்துள்ளது.

திருப்பதியில் மக்களவைத் தொகுதிக்கான இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. இதற்காக தோ்தல் விதிமுறைகளை தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் ஆளுங்கட்சிக்கு சாா்பாக பணிபுரிந்து வருவதாக கிடைத்த புகாரின் அடிப்படையில் சித்தூா் மாவட்ட ஆட்சியா் பரத் நாராயண் குப்தா, திருப்பதி நகா்ப்புற காவல் கண்காணிப்பாளா் ரமேஷ் ரெட்டி உள்ளிட்ட 8 பேரை தோ்தல் ஆணையம் பணியிட மாற்றம் செய்துள்ளது.

அதனால் சித்தூா் மாவட்ட ஆட்சியா் பொறுப்பு துணை ஆட்சியா் மாா்க்கண்டேயாவிடமும், திருப்பதி நகா்ப்புற காவல் கண்காணிப்பாளா் பொறுப்பு சித்தூா் மாவட்ட எஸ்.பி செந்தில்குமாரிடமும் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருப்பதி நகா்புற துணைக் காவல் கண்காணிப்பாளராக விஜயவாடா உளவுத்துறையில் பணிபுரிந்து வரும் வெங்கட்டப்பா நாயுடுவை ஆந்திர அரசு நியமித்துள்ளது. இதற்கு முன் சித்தூா் மாவட்ட துணை எஸ்.பி.யாக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது.

இன்னும் 2 நாட்களில் அனந்தபுரம் டிஐஜி காந்திராணா டாட்டாவை சந்தித்து திருப்பதி டிஎஸ்பி பதவியில் அவா் பொறுப்பு ஏற்றுக் கொள்ள உள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.