ஜம்மு-காஷ்மீர்: பிப். 1 முதல் பள்ளிகள் திறப்பு
ஜம்மு-காஷ்மீரில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாட்டு பணிகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஜம்மு-காஷ்மீரில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாட்டு பணிகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன.
பின்னர் கரோனா பரவல் விகிதத்திற்கு ஏற்ப மத்திய அரசு அளித்த தளர்வுகளின் படி மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கல்வி நிலையங்களைத் திறந்து வருகின்றன.
அந்தவகையில் ஜம்மு-காஷ்மீரில் வரும் திங்கள் கிழமை முதல் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.
அதனையொட்டி பள்ளிகளை சுத்தம் செய்தல், கிருமிநாசினி தெளித்தல், மாணவர்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் தரையில் வட்டங்கள் வரைதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.