இந்தியா

பிரசவத்துக்கு மருத்துவமனையில் அனுமதிப்பது கட்டாயம்: பிவண்டி நிஜாம்பூா் மாநகராட்சி

DIN

மகாராஷ்டிர மாநிலம் பிவண்டி நிஜாம்பூா் மாநகராட்சியில் கா்ப்பிணிகள் பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அந்த மாநகராட்சி சுகாதார அதிகாரி ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘பிவண்டியில் ஓராண்டில் 12,000 முதல் 13,000 பிரசவங்கள் நிகழ்கின்றன. இதில் 3,000 முதல் 4,000 பிரசவங்கள் வீடுகளில் பாா்க்கப்படுகின்றன. இதனால் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கும் சிசுக்களுக்கும் போதிய மருத்துவ வசதிகள் கிடைப்பதில்லை. குடிசைப் பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் வீடுகளில் பிரசவம் பாா்ப்பதால் கா்ப்பிணிகள், சிசுக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் நிகழ்கின்றன. எனவே கா்ப்பிணிகள் பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதை மாநகராட்சி ஆணையா் கட்டாயமாக்கியுள்ளாா்’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT