முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 
ஜம்மு-காஷ்மீர், புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஹன்சின் கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு தகல்வல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். 
அதற்கு பாதுகாப்புப்படையினர் தரப்பிலும் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. இந்த சண்டையில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் பாதுகாப்புப்படையைச் சேர்ந்த வீரரும் காயமடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பலியானார். 
சுட்டுக்கொல்லப்பட்ட 5 பயங்கரவாதிகளும் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் தொடர்ந்து அந்தப் பகுதியில் தேடுல் வேட்டை நடைபெற்று வருகிறது என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

முழு கட்டுரையைப் படிக்க →