முகப்பு
இந்தியா

திலீப் குமார் உடல்நிலை சீராக உள்ளது: மனைவி சாய்ரா பானு

திலீப் குமாரின் உடல்நிலை சீராக உள்ளதாக அவரது மனைவி சாய்ரா பானு தெரிவித்துள்ளார்.  

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

திலீப் குமாரின் உடல்நிலை சீராக உள்ளதாக அவரது மனைவி சாய்ரா பானு தெரிவித்துள்ளார். 
கடந்த ஜூன் 6-ஆம் தேதி சுவாசக் கோளாறு காரணமாக நடிகா் திலீப் குமாா் (98) மும்பையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு ஐந்து நாள்கள் சிகிச்சை பெற்ற பின்னா் அவா் வீடு திரும்பினாா். இந்நிலையில், அவருக்கு மீண்டும் சுவாசக் கோளாறு ஏற்பட்டதையடுத்து ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட அதே மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை மீண்டும் அனுமதிக்கப்பட்டாா். 
அவரின் வயதைக் கருத்தில்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த நிலையில் திலீப் குமாரின் உடல்நிலை சீராக உள்ளதாக அவரது மனைவி சாய்ரா பானு தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் கூறுகையில், "திலீப் குமாரின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் இன்னும் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார். நாங்கள் அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல விரும்புகிறோம், இருப்பினும் மருத்துவர்களின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட வாய்ப்பில்லை. அவரது ரசிகர்களின் பிரார்த்தனை தேவை, அவர் விரைவில் திரும்பி வருவார். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

முழு கட்டுரையைப் படிக்க →