முகப்பு
இந்தியா

கர்நாடகத்தில் மேலும் தளர்வுகள் அறிவிப்பு

கர்நாடகத்தில் கரோனா பரவல் குறைந்து வருவதையடுத்து மேலும் தளர்வுகள் அளித்து அம்மாநில முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
கோப்புப்படம்
பகிர்:

கர்நாடகத்தில் கரோனா பரவல் குறைந்து வருவதையடுத்து மேலும் தளர்வுகள் அளித்து அம்மாநில முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.
• புதிய தளர்வுகளின் படி, மெட்ரோ உள்ளிட்ட பொதுப்போக்குவரத்து திங்கள்கிழமை முதல் முழு இருக்கை வசதிகளுடன் செயல்பட அனுமதிக்கப்படும். 
• அரசு அலுவலங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்.
• இரவு நேர ஊரடங்கு உத்தரவு தினமும் இரவு 9.00 மணி முதல் காலை 5.00 மணி வரை அமலில் இருக்கும். மாறாக வார இறுதி ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது. 
• போட்டி பயிற்சி நோக்கங்களுக்காக நீச்சல் குளங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
• திருமண உள்ளிட்ட நிகழ்வுகளில் 100 பேரும், அதேசமயம் இறுதிச்சடங்குகளில் 20 பேரும் பங்கேற்கலாம்.
• வழிபாட்டுத் தலங்கள் திறக்க அனுமதிக்கப்படுகின்றன. சிறப்பு பூஜைகளுக்கு அனுமதி கிடையாது.
• கல்வி நிறுவனங்கள் அடுத்த உத்தரவு வரும் வரை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்பன உள்ளிட்ட தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. 
புதிய தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் அடுத்த 15 நாள்களுக்கு மாநிலத்தில் அமலில் இருக்கும் என்றும் தேவைப்பட்டால் மாவட்ட நிர்வாகம் கூடுதல் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.