முகப்பு
இந்தியா

நாட்டில் இதுவரை 35.75 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

நாட்டில் இதுவரை 35.75 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:34 AM
பகிர்:

நாட்டில் இதுவரை 35.75 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

மேலும் நாடு முழுவதும் 45 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் இன்று இரவு 7 மணி வரை வழங்கப்படுகின்றன.

இதுவரை 29.11 கோடி(29,11,72,390) பேர் முதல் தவணை தடுப்பூசியும், 6.63 கோடி(6,63,81,222) பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் போட்டுகொண்டுள்ளனர். 

மொத்தமாக 35.75 கோடி(35,75,53,612) தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், சுகாதாரத்துறையினர் முதல் தவணை - 1,02,33,029, இரண்டாம் தவணை - 73,30,716 

முன்களப்பணியாளர்கள் முதல் தவணை - 1,76,03,102, இரண்டாம் தவணை - 97,12,243 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். 

மேலும் வயதுவாரியாக, மாநிலவாரியாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் விவரத்தையும் மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. 

​​

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.