முகப்பு
இந்தியா

கர்நாடகத்தில் மேலும் 2,743 பேருக்கு கரோனா தொற்று

கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,743 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:35 AM
கோப்புப்படம்
பகிர்:

கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,743 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜூலை 2-ம் தேதி மட்டும் பதிவான கரோனா பாதிப்புகள் நிலவரம் பற்றிய தரவுகள் மாநில சுகாதாரத் துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. புதிதாக 2,743 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  
மேலும் 3,081 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 75 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். 

இதைத் தொடர்ந்து, கர்நாடகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 28,62,338 ஆக உயர்ந்துள்ளது. இதில் 27,68,632 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 35,601 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இன்றைய நிலவரப்படி 39,603 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.