வங்கதேச பிரதமருக்கு அன்னாசிப் பழங்களை வழங்கும் திரிபுரா முதல்வர்: காரணம் என்ன? 
இந்தியா

வங்கதேச பிரதமருக்கு அன்னாசிப் பழங்களை வழங்கும் திரிபுரா முதல்வர்: காரணம் என்ன?

வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் 650 கிலோ அன்னாசிப் பழங்களை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் 650 கிலோ அன்னாசிப் பழங்களை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்திய வங்கதேச உறவின் அடையாளமாக 2600 கிலோ வங்கதேச மாம்பழங்களை பிரதமர் மோடி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுக்கு பரிசாக அனுப்பி வைத்தார்.

இந்தியாவில் உள்ள வங்கதேச துணை தூதரகத்தின் மூலமாக இந்த மாம்பழங்கள் தலைவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இந்நிலையில் வங்கதேச பிரதமரின் இந்தப் பரிசுக்கு மரியாதை செலுத்தும் விதமாக திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் மாநிலத்தில் விளைவிக்கப்பட்ட 650 கிலோ அன்னாசிப் பழங்களை  அனுப்பி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேச தூதரகத்தின் மூலம் இந்த அன்னாசிப் பழங்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

ராணுவத்துக்கு எதிரான கருத்து: ராகுலுக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு

ரேஷன் கடையை சேதப்படுத்திய காட்டு யானை

வண்ணாரப்பேட்டை பகுதியில் குரங்குகள் அட்டகாசம்

சிவப்பு எச்சரிக்கை எதிரொலி: பள்ளிகளுக்கு இனறு விடுமுறை

SCROLL FOR NEXT