ராஜ்நாத் சிங்-நரேந்திர மோடி 
இந்தியா

ராஜ்நாத் சிங்குக்கு மோடி பிறந்த நாள் வாழ்த்து 

இன்று பிறந்தநாள் கொண்டாடும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

DIN


புதுதில்லி: இன்று பிறந்தநாள் கொண்டாடும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 70 ஆவது பிறந்த நாளையொட்டி நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி சுட்டுரையில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், எங்களது அமைச்சரவையின் மூத்த அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது அன்பான ஆளுமை மற்றும் ஞானத்திற்காக அவர் நாடு முழுவதும் போற்றப்படுகிறார். அவர் ஒரு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் நிர்வாகி. நமது தேசத்தின் சேவைக்காக, அவரது நீண்ட காலம் ஆரோக்கியமான வாழ்க்கைக்காக பிரார்த்தனை செய்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக்கியவர் இபிஎஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

மெல்லிசையே.. கௌரி கிஷன்!

கர்ஜனை மொழி கனிமொழி, செயல் வீரர் செந்தில் பாலாஜி: மு.க. ஸ்டாலின் புகழாரம்!

SCROLL FOR NEXT