இந்தியா

குறைதீா் அதிகாரியை நியமித்தது ட்விட்டர்!

DIN


மத்திய அரசின் புதிய விதிகளைப் பின்பற்றும் வகையில் வினய் பிரகாஷ் என்பவரை உள்நாட்டு குறைதீா் அதிகாரியாக ட்விட்டர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நியமித்தது.

ட்விட்டா், ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் போன்ற நிறுவனங்கள் தங்களது பயனாளா்களின் புகாா்கள் தொடா்பாக நடவடிக்கை எடுப்பதற்காக தலைமை நடவடிக்கை அதிகாரி, சிறப்பு பணி தொடா்பு நபா், உள்நாட்டு குறைதீா் அதிகாரி ஆகியோரை நியமிக்க வேண்டும் என்பது உள்பட பல புதிய விதிகளை மத்திய அரசு கடந்த பிப்ரவரி 25-இல் வெளியிட்டது.

அவற்றுக்கு இணங்கிச் செயல்பட சமூக ஊடகங்களுக்கு 3 மாத அவகாசம் அளிக்கப்பட்டது. விதிகளுக்கு இணங்காத நிறுவனங்களுக்கு எதிராக தடை உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, அந்த அவகாசம் மே 25-ஆம் தேதி நிறைவடைந்தது.

இருப்பினும், உள்நாட்டு குறைதீர் அதிகாரியை ட்விட்டர் நியமிக்காமல் இருந்ததால், மத்திய அரசுக்கும் ட்விட்டர் நிறுவனத்துக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது.

இந்நிலையில், உள்நாட்டு குறைதீா் அதிகாரியாக வினய் பிரகாஷை ட்விட்டர் நியமித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT