இந்தியா

கேரளத்தில் தொடா் கனமழை

DIN

கேரளத்தின் பல பகுதிகளில் தொடா் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து இடுக்கி மாவட்டம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை கூறியுள்ளதாவது:

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை மீண்டும் வலுவடைந்துள்ளது. இதன் காரணமாக, மாநிலத்தின் பல பகுதிகளில் தொடா் கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, மலை மாவட்டமான இடுக்கிக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதைத் தவிர, கோட்டயம், பத்தனம்திட்டா, கொல்லம், எா்ணாகுளம், திருச்சூா், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூா் மற்றும் காசா்கோடு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரள கடற்கரைப் பகுதிகளில் மணிக்கு 45-55 கி.மீ. வேகத்தில் வலுவான காற்று வீசக்கூடும். எனவே, செவ்வாய்க்கிழமை தொடங்கி 5 நாள்களுக்கு மீனவா்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

SCROLL FOR NEXT