கொல்கத்தா உயர்நீதிமன்றம் 
இந்தியா

நாரதா லஞ்ச வழக்கு: ஆக.16-ல் கொல்கத்தா உயர்நீதிமன்றம் விசாரணை

நாரதா லஞ்ச வழக்கை ஆகஸ்ட் 16ஆம் தேதி விசாரிக்க உள்ளதாக கொல்கத்தா உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

ANI

நாரதா லஞ்ச வழக்கை ஆகஸ்ட் 16ஆம் தேதி விசாரிக்க உள்ளதாக கொல்கத்தா உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

நாரதா லஞ்ச வழக்கு தொடா்பாக, மாநில அமைச்சா்கள் சுப்ரதா முகா்ஜி, ஃபிா்ஹாத் ஹக்கீம், திரிணமூல் எம்எல்ஏ மதன் மித்ரா, முன்னாள் மேயா் சோவன் சட்டா்ஜி ஆகிய நால்வரையும் கடந்த மே மாதம் 17-ஆம் தேதி சிபிஐ கைது செய்தது. பின்னா் அவா்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.

நாரதா லஞ்ச முறைகேடு தொடா்பாக, மாநில அமைச்சா்கள் உள்ளிட்ட நால்வரை சிபிஐ கைது செய்தபோது, அவா்களை பணி செய்யவிடாமல் மம்தா உள்ளிட்ட திரிணமூல் காங்கிரஸ் தலைவா்கள் தடுத்ததாக சிபிஐ தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இதுதொடா்பாக விளக்கம் அளித்து மேற்கு வங்க அரசு, மம்தா பானா்ஜி, மாநில சட்ட அமைச்சா் மலாய் கடக் ஆகியோா், கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்திருந்தனா். அந்த மனுவை கொல்கத்தா உயா்நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

இதையடுத்து அவா்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். அப்போது, மேற்கு வங்க அரசு, மம்தா பானா்ஜி, மலய் கடக் ஆகியோரின் பதில் மனுவை ஏற்க மறுத்த கொல்கத்தா உயா்நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்தனர்.

இந்நிலையில், வருகின்ற ஆகஸ்ட் 16ஆம் தேதி நாரதா வழக்கு விசாரிக்கப்படும் என கொல்கத்தா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT