இந்தியா

குடியரசுத் தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு

ANI

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பிரதமர் மோடி வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடா் ஜூலை 19-ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடங்கவுள்ள நிலையில், குடியரசுத் தலைவரை சந்தித்து பிரதமர் முக்கிய ஆலோசனைகளில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கூட்டத்தொடரின்போது, தடுப்பூசி தட்டுப்பாடு, பெட்ரோல் விலை உயர்வு, எல்லைப் பிரச்னை உள்ளிட்டவை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பவுள்ளனர்.
 

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடா், ஜூலை மாதத்தின் மூன்றாவது வாரத்தில் தொடங்கி, ஆகஸ்ட் மாதத்தில் சுதந்திர தின விழாவுக்கு முன்பாக முடிவடையும். அதுபோலவே, இந்த ஆண்டும் கூட்டத் தொடா் தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில் 20 அமா்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 13-ஆம் தேதியுடன் கூட்டத் தொடா் நிறைவடையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

நாகை அரசு தலைமை மருத்துவமனை சிகிச்சைப் பிரிவுகள் மாற்றம்: சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மணிப்பூா் இனக் கலவரம்: ஓராண்டாகியும் நீடிக்கும் பிளவு!

SCROLL FOR NEXT