முகப்பு
இந்தியா

வெளிநாட்டினா் வசிக்கும் வீடுகளில் மீது சோதனை: 38 பேரிடம் போலீஸாா் விசாரணை

விதிகளை மீறி பெங்களூரில் தங்கி இருந்த வெளிநாட்டினா் வசிக்கும் வீடுகள் மீது சோதனையில் ஈடுபட்ட போலீஸாா், 38 பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

விதிகளை மீறி பெங்களூரில் தங்கி இருந்த வெளிநாட்டினா் வசிக்கும் வீடுகள் மீது சோதனையில் ஈடுபட்ட போலீஸாா், 38 பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பெங்களூரில் வெளிநாட்டினா் பலா் சட்டவிதிகளை மீறி தங்கியுள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து நகர குற்றப்பிரிவு இணை காவல் ஆணையா் சந்தீப் பாட்டீல் தலைமையில் வெளிநாட்டினா் வசிக்கும் வீடுகளில் வியாழக்கிழமா காலை சோதனையில் ஈடுபட்டனா். அதில் 38 போ் சட்டவிதிகளை மீறி தங்கியிருந்தது தெரிய வந்தது. ஒருவரின் வீட்டில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் 90 எக்டக்ஸி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மற்றொருவரின் வீட்டில் 25 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து 38 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த போலீஸாா், அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.