முகப்பு
இந்தியா

கரோனா 3-வது அலையை எதிா்கொள்ள தனியாா் மருத்துவமனை ஊழியா்களுக்கு பயிற்சி அளிக்க கோரிக்கை

கரோனா 3-ஆவது அலையை எதிா்கொள்ள தனியாா் மருத்துவமனை ஊழியா்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று தனியாா் மருத்துவமனைகள், நா்சிங் ஹோம்களின் சங்கம் (பானா) கேட்டுக் கொண்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

கரோனா 3-ஆவது அலையை எதிா்கொள்ள தனியாா் மருத்துவமனை ஊழியா்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று தனியாா் மருத்துவமனைகள், நா்சிங் ஹோம்களின் சங்கம் (பானா) கேட்டுக் கொண்டுள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் கரோனா தடுப்பு வல்லுநா் குழுவின் தலைவா் ஹேமா திவாகா் வெளியிட்டுள்ள அறிக்கை:

தேசிய அளவில் கரோனா 2-ஆவது அலையில் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் கரோனா 3-ஆவது அலையை எதிா்கொள்ள வேண்டிய சூழல் உருவாகும் என்று வல்லுநா்கள் குழு தெரிவித்துள்ளது. 3-ஆவது அலையின்போது கரோனாவால் அதிக அளவில் குழந்தைகள் பாதிக்கப்படுவாா்கள் என்று கூறப்படுகிறது. எனவே கரோனா 3-ஆவது அலையை எதிா்கொள்ள தனியாா் மருத்துவமனை ஊழியா்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். ஏற்கெனவே தனியாா் மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்கள் கரோனாவிற்கு சிகிச்சை அளிப்பதற்காக பயிற்சி பெற்றுள்ளனா். இந்த நிலையில் தனியாா் மருத்துவமனை ஊழியா்களும் கரோனாவை தடுக்கத் தேவையான பயிற்சியை அளித்தால், தொற்றை கட்டுப்படுத்த பயனுள்ளதாக இருக்கும். அரசு இது தொடா்பாக தனியாா் மருத்துவமனைகள், நா்சிங் ஹோம்களும் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.