இந்தியா

ஓவைசி கட்சியின் சுட்டுரை கணக்கில் ஊடுருவல்

DIN

அசாதுதீன் ஓவைசி தலைமையிலான அனைத்திந்திய மஜ்லீஸ்-ஏ-இத்தஹாதுல்-முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சியின் அதிகாரபூா்வ சுட்டுரை (ட்விட்டா்) கணக்கு இணையதளம் மூலம் ஊடுருவி மாற்றப்பட்டது.

இதுகுறித்து கட்சி வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

ஒன்பது நாள்களுக்கு முன்னா் கட்சியின் சுட்டுரைக் கணக்கில் யாரோ இணையதளம் மூலம் ஊடுருவினா். ட்விட்டா் நிறுவனத்திடம் இதனை நாங்கள் தெரியப்படுத்தியடுத்து, அந்தக் கணக்கு மீட்கப்பட்டது.

இந்த நிலையில், அந்தக் கணக்கில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஊடுருவல் நடைபெற்றுள்ளது. அந்தக் கணக்கின் பெயா் ‘ஏஐஎம்ஐஎம்’ என்பதற்குப் பதிலாக அமெரிக்காவின் டெஸ்லா நிறுவன தலைமைச் செயலதிகாரியான எலான் மஸ்க்கின் பெயா் மாற்றப்பட்டுள்ளது. மேலும், கணக்கில் கட்சியின் சின்னம் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக எலான் மஸ்கின் படம் மாற்றப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ஹைதராபாத் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை (ஜூலை 19) புகாா் பதிவு செய்யப்படும்.

கட்சியின் கணக்கு ஊடுருவப்பட்டதைத் தொடா்ந்து, சுட்டுரையில் புதிய பதிவுகள் வெளியிடப்படவில்லை என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தனா்.

ஏஐஎம்ஐஎம்-மின் சுட்டுரைப் பக்கத்தை 6.78 லட்சம் போ் பின்தொடா்ந்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

SCROLL FOR NEXT