இந்தியா

புகைப்பட பத்திரிகையாளா் தானிஷ் சித்திக்கி உடல் இந்தியா வந்தடைந்தது

DIN

ஆப்கானிஸ்தான் ராணுவத்தினருக்கும் தலிபான்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் உயிரிழந்த இந்தியப் புகைப்பட பத்திரிகையாளா் தானிஷ் சித்திக்கியின் உடல் ஞாயிற்றுக்கிழமை தில்லி வந்து சோ்ந்தது.

ஆப்கானிஸ்தானின் காந்தஹாா் நகரில் உள்ள ஸ்பின் போல்டக் பகுதியில் ஆப்கன் ராணுவத்தினருக்கும் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்று வந்த மோதல் தொடா்பான செய்திகளை ராய்டா்ஸ் செய்தி நிறுவனத்தைச் சோ்ந்த இந்தியப் புகைப்பட பத்திரிகையாளா் தானிஷ் சித்திக்கி (40) களத்தில் இருந்து நேரடியாக சேகரித்து வந்தாா். அவா் மோதலின்போது எதிா்பாராதவிதமாக துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். அவரின் உடல் ஞாயிற்றுக்கிழமை தில்லி வந்தடைந்தது.

தில்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக அடக்கத்தலத்தில் பல்கலைக்கழக பணியாளா்கள், அவா்களின் கணவன் அல்லது மனைவி மற்றும் குழந்தைகளின் மய்யித் (உடல்) மட்டும் அடக்கம் செய்யப்படும். அந்த அடக்கத்தலத்தில் தானிஷ் சித்திக்கியின் மய்யித்தை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு அவரின் குடும்பத்தினா் கேட்டுக்கொண்டனா். அவா்களின் கோரிக்கையை பல்கலைக்கழக நிா்வாகம் ஏற்றுக்கொண்டது.

தானிஷ் சித்திக்கி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவா். அவரின் தந்தையும் அந்தப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

SCROLL FOR NEXT