ஹெச்.சி.எல். நிர்வாக இயக்குநர் சிவ நாடார் ராஜிநாமா
ஹெச்.சி.எல். நிர்வாக இயக்குநர் சிவ நாடார் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். தலைமை செயல் அதிகாரியாக இருந்த விஜயகுமார், நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஹெச்.சி.எல். நிர்வாக இயக்குநர் சிவ நாடார் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். தலைமை செயல் அதிகாரியாக இருந்த விஜயகுமார், நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
பிரபல முன்னணி மென்பொருள் நிறுவனமான ஹெச்.சி.எல் நிறுவனத்தை சிவ நாடார் தனது நண்பர்களுடன் கடந்த 1976 ஆம் ஆண்டு தொடங்கினார். உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனத்தில் சிவ நாடாருக்கு 60%க்கும் அதிகமான பங்குகள் உள்ளன. 45 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவனத்தை நடத்தி வந்த இவர், நிர்வாக இயக்குநர் பதவியை நேற்று ராஜிநாமா செய்துள்ளார். தற்போது அவருக்கு வயது 76.
Advertisement
எனினும் அவர் நிறுவனத்தின் இயக்குனர் குழுவின் ஆலோசகராகத் தொடர்ந்து செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவ நாடார் ராஜினாமா செய்ததையடுத்து, தலைமை செயல் அதிகாரியாக இருந்த விஜயகுமார், நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்தியாவில் தற்போது மூன்றாவது மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாக ஹெச்.சி.எல் இருப்பது குறிப்பிடத்தக்கது.