மகாராஷ்டிரத்தில் புதிதாக 8,159 பேருக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,159 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,159 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 8,159 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 62,37,755 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 7,839 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 165 பேர் பலியாகியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 60,08,750 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 1,30,918 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 94,745 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.