முகப்பு
இந்தியா

எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு

எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை நாளை (ஜூலை 23) காலை 11 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைப்பு
பகிர்:

எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை நாளை (ஜூலை 23) காலை 11 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.

ஜூலை 19ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 

இந்நிலையில் பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், எதிர்க்கட்சி அமளி காரணமாக நாடாளுமன்ற அவைகள் ஒத்திவைக்கப்பட்டு வந்தது.  

இதையடுத்து இன்று காலை 11 மணிக்கு கூடிய நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் எனக் கூறி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

இந்நிலையில் மதியம் கூடிய மக்களவை எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாளை (ஜூலை 23) காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் ஓம்பிர்லா அறிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →