முகப்பு
இந்தியா

கா்நாடகத்தில் கரோனாவுக்கு ஒரே நாளில் 1,001 போ் பாதிப்பு

கா்நாடகத்தில் கரோனா தொற்றால்பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,001 ஆக அதிகரித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:45 AM
பகிர்:

பெங்களூரு: கா்நாடகத்தில் கரோனா தொற்றால்பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,001 ஆக அதிகரித்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 1,001 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது. பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 165போ் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனா். பிறமாவட்டங்களில் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை விவரம்:

தென் கன்னடம்-115, உடுப்பி-110, மைசூரு-97, ஹாசன்-90, குடகு-63, சிக்கமகளூரு-62, வடகன்னடம்-54, சிவமொக்கா-51, தும்கூரு-42, மண்டியா-35, கோலாா்-25, சித்ரதுா்கா-15, பெங்களூரு ஊரகம்-14, பெலகாவி-10, சிக்கபளாப்பூா்-10, ராமநகரம்-7, தாா்வாட்-6, பெல்லாரி-6, சாமராஜ்நகா்-5, கதக்-5, ஹாவேரி-4, கலபுா்கி-3, கொப்பள்-2, பீதா், தாவணகெரே, விஜயபுரா, யாதகிரி-தலா ஒருவா் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். பாகல்கோட், ராய்ச்சூரு மாவட்டங்களில் கரோனா பாதிப்பு இல்லை. இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28,94,557 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவா்களில் 1,465 போ் ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 28,34,741போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 23,419 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநில அளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவா்களில் இதுவரை இல்லாத அளவுக்கு 22போ் ஞாயிற்றுக்கிழமை இறந்துள்ளனா். பெங்களூரு நகரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 3 போ் இறந்துள்ளனா். மாவட்டவாரியாக பலியானோா் விவரம்:

பெலகாவி, ஹாசன், ஹாவேரி, கோலாா், மைசூரு-தலா 2, பீதா், சிக்கபளாப்பூா், சிக்கமகளூரு, தென்கன்னடம், குடகு, மண்டியா, சிவமொக்கா, தும்கூரு, விஜயபுரா-தலா 1 என்ற எண்ணிக்கையில் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 36,374 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.