இந்தியா

பெகாஸஸ் விவகாரத்தை ஹிரோஷிமாவுடன் ஒப்பிட்ட சிவசேனா

DIN

ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசியதை பெகாஸஸ் விவகாரத்துடன் ஒப்பிட்டு சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா கட்டுரை வெளியிட்டுள்ளது.

பெகாஸஸ் மென்பொருள் மூலம் வேவு பார்ப்பதற்கான இலக்கில் எதிர்க்கட்சி தலைவர்கள் இருந்ததாக வெளியான செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துவருகிறது.

இந்த விவகாரத்தை முன்வைத்து எதிரக்கட்சிகள் நாடாளுமன்ற மழைக் காலக் கூட்ட தொடரில் அமளியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், பெகாஸஸ் மென்பொருள் மூலம் வேவு பார்த்தது ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசியதைபோல் உள்ளது என சிவசேனா விமரிசித்துள்ளது.

இதுகுறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னா வெளியிட்ட கட்டுரையில், "நவீன கால தொழில்நுட்பம் நம்மை அடிமைத்தன காலத்திற்கு இட்டு சென்றுள்ளது. ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசியதற்கும் பெகாஸஸ் விவகாரத்திற்கும் பெரிய வேறுபாடு இல்லை. 

ஹிரோஷிமாவில் மக்கள் பலியாகினர். பெகாஸஸ் சுதந்திரத்தை மரணிக்க வைத்துள்ளது. நாமும் வேவு பார்க்கப்பட்டிருப்போமா என அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர். நீதித்துறையும் ஊடகமும் இதேமாதிரியான நெருக்கடியை சந்தித்துள்ளது. தேசிய தலைநகரில் சுதந்திரமான சூழல் சில ஆண்டுகளுக்கு முன்பே முடிந்துவிட்டது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

SCROLL FOR NEXT