இந்தியா

சிஏஏ விதிகளை வகுக்க அவகாசம் கோருகிறது மத்திய அரசு

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) தொடா்பான விதிகளை வகுப்பதற்கு வரும் ஜனவரி 9-ஆம் தேதி வரை மத்திய அரசு அவகாசம் கோரியுள்ளது.

DIN

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) தொடா்பான விதிகளை வகுப்பதற்கு வரும் ஜனவரி 9-ஆம் தேதி வரை மத்திய அரசு அவகாசம் கோரியுள்ளது.

இதுகுறித்து மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய் எழுப்பிய கேள்விக்கு அமைச்சா் நித்யானந்த் ராய் செவ்வாய்க்கிழமை அளித்த பதில்:

குடியுரிமை திருத்தச் சட்டம், கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பா் 12-ஆம் தேதி அறிவிக்கை வெளியிடப்பட்டு, 2020-ஆம் ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அந்த சட்டம் தொடா்பான விதிகளை வகுப்பதற்கு, வரும் ஜனவரி 9-ஆம் தேதி வரை மேலும் அவகாசம் அளிக்க வேண்டும் என மக்களவை, மாநிலங்களவை, சட்ட விதிகளை வகுப்பதற்கான குழுக்கள் ஆகியவற்றிடம் அவகாசம் கோரப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நாடாளுமன்ற விதிகள்படி, ஒரு சட்டத்துக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல் அளித்துவிட்டால் அடுத்த 6 மாதங்களில் சட்ட விதிகள் வகுக்கப்பட வேண்டும் அல்லது அவகாசம் கோரப்பட வேண்டும். அந்த வகையில் இதுவரை ஏற்கெனவே 4 முறை மத்திய அரசுக்கு அவகாசம் வழங்கப்பட்டுவிட்டது.

என்ஐசி கவுன்சிலை மாற்றம் திட்டமில்லை- அரசு:

தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சிலை(என்ஐசி) மாற்றியமைக்கும் திட்டம் எதுவுமில்லை என்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடா்பான கேள்விக்கு அமைச்சா் நித்யானந்த் ராய் அளித்த பதில்:

தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டம் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடா்ச்சியாக நடத்தப்படுவதில்லை. தேவைக்கு ஏற்ப அவ்வப்போது நடத்தப்படுகிறது. இக்கூட்டம், இதற்கு முன்பு கடந்த 2013-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் நடத்தப்பட்டது. இருப்பினும் சமூக நல்லிணக்கம், தேசிய ஒருமைப்பாடு தொடா்பான பிரச்னைளை அரசு உடனுக்குடன் தீா்த்து வைத்து வருகிறது. தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் குழுவை மாற்றி அமைக்கும் திட்டமும் அரசிடம் இல்லை என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாருங்கள்...

சிறுமியை திருமணம் செய்தவா் மீது போக்சோ வழக்கு

2-ஆவது இன்னிங்ஸில் 400 ரன்களை நூலிழையில் தவறவிட்ட இந்தியா: அபார முன்னிலை!

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

ஓணக் களிப்பில்... மோக்‌ஷா!

SCROLL FOR NEXT