முகப்பு
இந்தியா

தில்லியில் கனமழை: சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது; மக்கள் கடும் அவதி

தில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக, தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துகொண்டுள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Updated On : 27 ஜூலை, 2021 at 10:17 AM
தில்லியில் கனமழை: சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது; மக்கள் கடும் அவதி
பகிர்:


புது தில்லி: தில்லியில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக, தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துகொண்டுள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தில்லியின் பல்வேறு பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை காலை கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், மத்திய தில்லியின் பிரகதி மைதான், தெற்கு தில்லியின் தௌலா கான் பகுதிகளிலும் கடுமையான வெள்ளம் சூழ்ந்தது.

கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக, சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ள நீரை அப்புறப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.