இந்தியா

குழந்தைகளுக்கு ஆகஸ்ட் முதல் கரோனா தடுப்பூசி?

குழந்தைகளுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் கரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். 

DIN


குழந்தைகளுக்கு ஆகஸ்ட் மாதம் முதல் கரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். 

பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கூட்டத்தில் அமைச்சர் மன்சுக் மாண்டவியா இதனை தெரிவித்துள்ளார். 

12 முதல் 18 வயதுடைய சிறாகளுக்கான ஆகஸ்ட் மாதம் முதல் கரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளதாக தில்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு சமீபத்தில் தெரிவித்திருந்தது.

கரோனா மூன்றாவது அலை குறித்து ஆய்வாளர்கள் எச்சரித்து வரும் நிலையில், மூன்றாவது அலையானது முதல் மற்றும் இரண்டாவது அலையை விட மோசமானதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இது குழந்தைகளை அதிகம் தாக்கும் என்று கூறப்படுவதால், தடுப்பூசிகளை போதுமான அளவுக்கு இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான கரோனா தடுப்பூசி உற்பத்தி பணிகளில் சைடஸ் கேடில்லா நிறுவனம் இறுதிகட்டத்தில் உள்ளது.  ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் தொடக்கத்தில் இம்மருந்து பயன்பாட்டிற்கு வரும் என்று கரோனாவுக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவர் மருத்துவர் என்.கே.அரோரா தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT