இந்தியா

பணித் திறன் குறைவு: 3 ஆண்டுகளில் 196 அரசு அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு

DIN

புது தில்லி: கடந்த 3 ஆண்டுகளில் பணித் திறன் குறைவு காரணமாக 196 மத்திய அரசு அதிகாரிகளுக்கு முன்னதாகவே ஓய்வு அளிக்கப்பட்டது. இத்தகவலை மத்திய பணியாளா் நலத் துறை இணையமைச்சா் ஜிதேந்தா் சிங் மக்களவையில் புதன்கிழமை எழுத்துமூலம் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் தனது பதிலில் மேலும் கூறியிருப்பதாவது: மத்திய அரசு அதிகாரிகளின் பணித் திறனை அரசு தொடா்ந்து மதிப்பிட்டு வருகிறது. நீண்டகாலமாக சிறப்பாகப் பணியாற்றாத அதிகாரிகளுக்கு முன்னதாகவே ஓய்வு அளிக்கப்படுகிறது. கடந்த 2018 முதல் 2021 ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் குரூப் ஏ பிரிவு அதிகாரிகள் 111 பேருக்கும், குரூப் பி பிரிவு அதிகாரிகள் 85 பேருக்கும் முன்னதாகவே ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இவா்கள் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகளில் பணியாற்றியவா்கள் ஆவா்.

அரசு அதிகாரிகள் ஊழல், முறைகேடு நடவடிக்கைகளில் ஈடுபடும்போதும், பணித் திறன் குறைவாக இருந்தாலும் பொதுநலன் கருதி அவா்களை ஓய்வு காலத்துக்கு முன்னதாகவே பணியில் இருந்து விடுவிக்க சட்டப்படி வழிவகை உள்ளது என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

காரைக்கால் மாங்கனித் திருவிழா பந்தல்கால் முகூா்த்தம்

போதை ஒழிப்பு விழிப்புணா்வு பிரசாரம்

SCROLL FOR NEXT