இரு அவைகளும் ஒத்திவைப்பு 
இந்தியா

நாடாளுமன்றத்தில் 8வது நாளாக அமளி: இரு அவைகளும் ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்திம் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் அவைகள் பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.

ANI

நாடாளுமன்றத்திம் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் அவைகள் பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் ஜூலை 19இல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஆகஸ்ட் 13 வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் பெகாஸஸ் விவகாரத்தை அவைகளில் விவாதிக்க வேண்டுமென கடந்த 8 நாள்களாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை மக்களவை கூடியவுடன், நேற்று மாலை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் காகிதத்தை கிழித்தெறிந்ததற்காக ஆளும் கட்சி எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து இரு தரப்பினர்களும் அமளியில் ஈடுபட்டதால் 11.30 மணிவரை அவை ஒத்திவைக்கபடுபதாக தெரிவிக்கப்பட்டது.

அதேபோல், மாநிலங்களவையிலும் பெகாஸஸ் விவகாரத்தை விவாதிக்க கோரி அவை தொடங்கியவுடன் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடத் தொடங்கினர். இதனால் அவையை பிற்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அக்டோபர் மாதப் பலன்கள் - மீனம்

அக்டோபர் மாதப் பலன்கள் - கும்பம்

சென்னையில் இன்றும் நாளையும் கனமழை!

அக்டோபர் மாதப் பலன்கள் - மகரம்

அக்டோபர் மாதப் பலன்கள் - தனுசு

SCROLL FOR NEXT