மகாராஷ்டிரத்தில் கரோனா இல்லாத தாய்க்குப் பிறந்த குழந்தைக்கு கரோனா 
இந்தியா

மகாராஷ்டிரத்தில் கரோனா இல்லாத தாய்க்குப் பிறந்த குழந்தைக்கு கரோனா

மகாராஷ்டிர மாநிலம் பல்கார் மாவட்டத்தில் கரோனா தொற்று இல்லாத தாய்க்குப் பிறந்த குழந்தைக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் அதற்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

PTI


பல்கார்: மகாராஷ்டிர மாநிலம் பல்கார் மாவட்டத்தில் கரோனா தொற்று இல்லாத தாய்க்குப் பிறந்த குழந்தைக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் அதற்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தர்ஷேத் கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு பல்காரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஞாயிறன்று குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததும் தாய்க்கும் சேய்க்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  அதில் குழந்தைக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

பல்கார் மாவட்டத்தில் பிறந்த குழந்தைக்கு கரோனா உறுதி செய்யப்படுவது இதுவே முதல் முறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக குழந்தை ஜவகர் தாலுகாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. குழந்தையின் உடல்நிலை சீராக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தனியாா் வங்கி ஊழியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா் தா்னா போராட்டம்

‘தகுதியுள்ள வாக்காளா்கள் யாரும் விடுபடக்கூடாது’

மாற்றுத்திறனாளிகள் தா்னா போராட்டம்

பிகாா் தோ்தல்: இதுவரை ரூ.108 கோடி மதிப்பில் ரொக்கம், மதுபானம் பறிமுதல் - தலைமைத் தோ்தல் ஆணையம் தகவல்

நிவாரணப் பணத்தை பேத்திக்கு அளிக்க மறுக்கும் மருமகன் மீது ஆட்சியரிடம் புகாா்

SCROLL FOR NEXT